Dream 11, MY Team 11, MPL உள்ளிட்ட ஆன்லைன் கேமிங் ஆப்களுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவு ஃபிப்வரி 6–ம் தேதி பிற்பகல் மூன்று மணியில் இருந்து உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இனி இதில் பணம் கட்டி விளையாட முடியாது.
சில ஆப்கள் சிறுவர்களை குறிவைத்து, பணம் கொடுத்து வருகின்றன. அதில் கடன் வாங்கும் சிறுவர்கள், ஃபேன்டஸி லீக்களில் பணத்தைக் கட்டி அதை இழக்கின்றனர். உரிய காலத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாதபோது, கடன் கொடுத்தவர்கள் தகாத முறையில் நடந்துகொள்கின்றனர். இதைத் தாங்க முடியாமல், சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக வக்கீல் முகமது ரிஸ்வி வழக்கு தொடுத்திருந்தார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, இந்திய கேப்டன் விராட் கோலி, பி.சி.சி.ஐ தலைவர் செளரவ் கங்குலி உள்ளிட்டோருக்கு, விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் ஏற்கனவே Dream 11 உள்ளிட்ட, பணம் கட்டி விளையாடும் கேமிங் ஆப்களுக்கு தடை விதித்துவிட்டது.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஒரு, சட்ட மசோதாவை முன்வைத்தார். அதில், ‘இன்று முதல் தமிழ்நாட்டில் பணம் கட்டி விளையாடடும், ஃபேன்டஸி லீக், கேமிங் ஆப்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஃபேன்டஸி கேமிங் ஆப்களில் முதலிடம் வகிப்பது Dream 11. நாள்தோறும் பல போட்டிகளில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான, மக்களின் பணம் புழங்குகிறது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து Dream 11 ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘தமிழ்நாடு அரசின் கேமிங் சட்டத்தின் கீழ், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தை கொடுக்க முயற்சித்து வருகிறோம். இருப்பினும், தமிழ்நாட்டில் வசிப்பவர்கள், பணம் கட்டி இனி Dream 11 போட்டிகளில் பங்கேற்க முடியாது. ஆனால், பணம் கட்டாமல் விளையாடும் பிராக்டீஸ் போட்டிகளில் பங்கேற்கலாம்.
Also Read: “டாக்டர் அழைக்கும்போது ஷர்துல் – வாஷி பேட்டிங்கை பார்த்துக்கொண்டிருந்தேன்! – Virat Kohli
போட்டிகளில் விளையாடி பணம் வென்றவர்கள், பணம் என்னவாகும் என்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. வழக்கம் போல, உங்கள் வங்கிக் கணக்கு மூலம் அதை எடுத்துக்கொள்ள முடியும்’ என விளக்கம் அளித்துள்ளது.
Leave a Reply