கமென்ட்ரி இடைவேளையின்போது Ricky Ponting, ட்விட்டரில் எதாவது கேட்க வேண்டும் என்றால் கேளுங்கள் எனச் சொன்னதும், மொதுமொதுவென குவிந்தன கேள்விகள். அதில் சில கேள்விகளுக்கு Ricky Ponting அளித்த பதில்.
டெய்லெண்டர்களுக்கு பெளன்சர் வீசுவது சரியா?
டெய்லெண்டர்களுக்கு பெளன்சர் வீசக்கூடாது என எந்த விதிமுறையும் இல்லை. இதுவும் ஆட்டத்தின் ஒரு அங்கம்.
ஆஸி முதல் இன்னிங்ஸில் போதுமான ரன்கள் குவித்துவிட்டதா?
இல்லை. முதல் நாள் பிட்ச் இருந்த சூழலைப் பார்த்து, 350–400 என்பது பார் ஸ்கோராக இருக்கும் என நினைத்தேன்.
இந்தியாவுக்கு எவ்வளவு ரன்கள் இலக்கு வைத்தால் நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்வது எளிதாக இருக்கும்?
250 ரன்களுக்கு மேல் இலக்கு எனில், இந்தியா சேஸ் செய்வது கடினம்.
பேட்டிங்குக்கு சாகதமான இந்த பிட்ச்சில், ஆரம்பத்தில் புஜாரா 100 பந்துகளில் 16 ரன்கள் குவித்தது நல்ல அணுகுமுறையா?
இது சரியான அணுகுமுறை இல்லை. புஜாரா ரன் குவிப்பதில் இன்னும் துடிப்புடன் செயல்பட வேண்டும். அவர் மெதுவாக ரன் சேர்ப்பது, அவருடன் பேட் செய்பவர்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.
நேதன் லயன், அஷ்வின் இந்த டெஸ்ட்டில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லையே?
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அஷ்வினை செட்டிலாக விடாமல், நன்றாக பேட் செய்துவிட்டனர். அதனால்தான் இந்த டெஸ்ட்டில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.
ஒரு கிரிக்கெட் வீரரிடம் இருந்து பாடம் கற்க விரும்புகிறீர்கள் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?
பிரயன் லாராவுடன் அமர்ந்து பேட்டிங் குறித்து பேசிக்கொண்டிருக்க விரும்புகிறேன்.
பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மூவரில் பெரிதும் தாக்கம் ஏற்படுத்துபவர்?
ஸ்டார்க், ஹேசில்வுட்டை விட கம்மின்ஸ் சிறந்தவர். அதனால்தான், அவர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
சுப்மன் கில் பற்றி ஒரே வார்த்தையில்…
திறமையானவர்
Also Read: ஒர்க் அவுட் ஆன மைண்ட் கேம்… சிட்னியில் ஸ்மித் சதம் அடித்தது எப்படி?!
பிக்பேஷ் லீக் வெல்வது யார்?
தற்போதைய சூழலில் கணிப்பது சிரமம். ஆனால், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வெற்றிபெற விரும்புகிறேன்.
Leave a Reply