பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஸ்திரேலியா – இந்தியா மூன்றாவது டெஸ்ட் நாளை சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது. 1-1 என தொடர் சமநிலையில் இருப்பதால் இரண்டு அணிகளும் இந்தப் போட்டியில் வென்று முன்னிலை பெறும் முனைப்பில் உள்ளன. இரண்டு அணிகளிலும் இரண்டு புதிய வீரர்கள் நாளை களம் காண்கின்றனர். இப்படியிருக்க நாளைய ஆட்டத்திற்கான Dream11 அணியில் யாரை எடுக்கலாம் யாரை எடுக்காமல் விடலாம் என்கிறதைப் பற்றி பார்க்கலாம்.
விக்கெட் கீப்பர் – ரிஷப் பன்ட்
ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினை விட ரிஷப் சற்று மதிப்புமிக்க வீரராக தெரிவதற்கு காரணம் அவரது பேட்டிங். குறைவான நேரத்தில் ரிஷப் பன்ட்டின் பேட்டில் இருந்து விரைவாக ரன் வரும். அணி நல்ல நிலையில் இருக்கிறதோ, மோசமான நிலையில் இருக்கிறதோ, பன்ட் 50 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தால் அதில் குறைந்தது ஆறு பவுண்டரிகள் வந்து விடும். இதே பவுண்டரி கணக்கை நாம் டிம் பெயினிடம் எதிர்பார்க்க முடியாது என்பதால் ரிஷப் பன்ட் தான் நமது அணியின் விக்கெட் கீப்பர்.
பேட்ஸ்மேன்கள் – கில், ரஹானே, வார்னர், லாபுஷேன், ஸ்மித்
கில் முதல் டெஸ்டிலேயே தன்னுடைய மொத்த திறனையும் காட்டிவிட்டார். ஆஸ்திரேலிய வேகங்களுக்கு எதிராக அவரின் முதிர்ச்சியைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மேலும், ரோஹித் தற்போதுதான் காயத்திலிருந்து வந்திருப்பதாலும் அவரை விட கில்லுக்கு கிரெடிட்ஸ் குறைவு என்பதாலும் அவரை எடுத்து விடலாம்.
வார்னர் மற்றும் லாபுஷேன் இருவருமே இந்த ஆண்டு தொடக்கத்தில் இதே சிட்னி மைதானத்தில் சதம் கடந்தவர்கள். அதுவும் லாபுஷேன் இரட்டை சதம் கடந்தார். காயத்திலுந்து வந்தாலும் சிட்னி மைதானத்தில் வார்னரின் சராசரி 66 என்பதால் அவரை சந்தேகமின்றி டிக் செய்யலாம். கேப்டன் கோலி இல்லாத குறையை ரஹானே சிறப்பாக பார்த்துக் கொண்டார். சதம் கடந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ரஹானே. மேலும் புஜாராவின் சமீபத்திய ஃபார்ம் மோசமாக இருப்பதால் ரஹானேவை எடுப்பது தான் நல்லது. ஸ்டீவ் ஸ்மித் – காயம்பட்ட சிங்கத்தின் மூச்சுக்காற்று என்னும் KGF திரைப்பட வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுவோம்.
Also Read: கபில்தேவ் – உலகின் கண்களில் இந்தியாவின் மரியாதை
ஆல் ரவுண்டர் – ஜடேஜா
இங்கு தான் ஒரு பெரிய தலைவலி வருகிறது. அஷ்வினை எடுக்கலாமா அல்லது ஜடேஜாவை டிக் அடிகாலாமா என்று. லாக் டவுனுக்குப் பிறகு மொத்தமாக மாறி வந்திருக்கிறார் அஷ்வின். ஸ்டீவ் ஸ்மித்தை சொல்லி வைத்து இரண்டு போட்டிகளிலும் தூக்கினார். அதே போல பிட்ஸ் அன்ட் பீசஸ் வீரராக வர்ணிக்கப்பட்ட ஜடேஜாவும் இப்போது வேறு லெவலுக்கு சென்று விட்டார். ஆஸ்திரேலிய அணியில் அதிகமாக வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அஷ்வின் முக்கியம் என்றாலும் ஜடேஜாவின் பேட்டிங் தற்போது அணிக்கு அசைக்க முடியாத அஸ்திரமாக மாறி உள்ளது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று ஒரிஜினல் 3D வீரராக ஜடேஜா செயல்படுவதால் அஷ்வினைக் காட்டிலும் ஜடேஜாவே நம் Dream11 அணியில் இடம் பெறுகிறார்.
பந்து வீச்சாளர்கள் – பும்ரா, ஸ்டார்க், லயன், கம்மின்ஸ்
பும்ரா கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசினார். தான் ஆடிய அத்தனை போட்டிகளையும் வெளிநாட்டு மைதானங்களில் மட்டுமே ஆடியவர் பும்ரா. அப்படி இருந்தும் அவர் சராசரி 20 தான். ஆக பெரிதாக ரிஸ்க் எடுக்க விரும்புவர்கள்தான் பும்ராவை எடுக்காமல் விடுவர். எப்படியும் 90% பேர்களுடைய அணிகளில் பும்ரா நிச்சயமாக இருப்பார்.
மிட்செல் ஸாடார்கின் வேகமும் துல்லியமும் ஒவ்வொரு முறையும் புதுப் பந்தில் பந்து வீசும் போது வெளிப்படுகிறது. பேட்டிங்கிலும் இரண்டு மூன்று பவுண்டரிகள் ஸ்டார்க்கிடம் இருந்து வர வாய்ப்புள்ளது. மூன்றாவது நாதன் லயன். ஆஸ்திரேலியாவின் ஆஃப் ஸ்பின் ஜாம்பவானான லயன், சிட்னி மைதானத்தில் மட்டும் இதுவரை 36 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அவரின் பொறுமையான லைனும் லென்த்தும் கண்டிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்கும். அடுத்ததாக கம்மின்ஸ். தற்போதைய நம்பர் ஒன் பவுலர் கண்டிப்பாக அணியில் இருத்தல் வேண்டும்.

கேப்டன் – ஒரு நல்ல ஆட்டக்காரரை அதிக காலம் கட்டுப்படுத்த முடியாது. ஸ்மித் எந்த நேரத்திலும் எழுச்சி பெறலாம். ஒரு வேளை அது நாளையாக இருந்தால் அவரைக் கேப்டனாக போடப்போகும் நமக்கு லாபம் தான்.
வைஸ் கேப்டன் – பேட் கம்மின்ஸ். ஒரு விக்கெட்டுக்கு 16 Dream11 புள்ளிகள். மேலும் கம்மின்ஸ் நிச்சயமாக இரண்டு இன்னிங்க்சிலும் பந்து வீசுவார் என்பதால் தயக்கம் ஏதுமின்றி கம்மின்ஸை துணைக் கேப்டனாக போட்டுக்கொள்ளலாம்.
Leave a Reply